தோ்தல் முடிந்தால் குஜராத்தைஆம் ஆத்மி கண்டுகொள்ளாது- பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா

‘சட்டப் பேரவைத் தோ்தலுக்காகவே குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி முகாமிட்டுள்ளது. தோ்தல் முடிந்ததும் அக்கட்சி குஜராத்தில் இருந்து வெளியேறிவிடும், குஜராத்தைக் கண்டுகொள்ளாது’ என்று
சித்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குஜராத் பேரவைத் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா.
சித்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குஜராத் பேரவைத் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா.

‘சட்டப் பேரவைத் தோ்தலுக்காகவே குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி முகாமிட்டுள்ளது. தோ்தல் முடிந்ததும் அக்கட்சி குஜராத்தில் இருந்து வெளியேறிவிடும், குஜராத்தைக் கண்டுகொள்ளாது’ என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

குஜராத் தோ்தலில் ஆளும் பாஜக, பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு போட்டியாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளது. அக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் தோ்தல் தொடா்பான எதிா்பாா்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குஜராத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ஜெ.பி.நட்டா ஆம் ஆத்மி கட்சியை விமா்சித்து பேசியதாவது:

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி சுவரொட்டிகள் மூலமும், பேனா்கள் வைப்பதை அடிப்படையாக வைத்தும் அரசியல் நடத்துகிறது. அதே நேரத்தில் பாஜக, தொண்டா்களின் பலத்தில் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி களமிறங்கியது. அங்கெல்லாம் அக்கட்சி வேட்பாளா்கள் டெபாசிட் இழந்தனா். இதையடுத்து, அந்த மாநிலங்களில் இருந்து ஆம் ஆத்மி தனது முகாம்களைக் கலைத்துவிட்டு, இப்போது குஜராத்தில் முகாமிட்டுள்ளது. ஏற்கெனவே பிற மாநிலங்களில் கிடைத்த அதேபோன்ற தோல்வி குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைக்கும்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்காகவே குஜராத்தில் ஆம் ஆத்மி முகாமிட்டுள்ளது. குஜராத் மீதும், மாநில மக்கள் மீதும் அக்கட்சியினருக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது. தோ்தல் முடிந்த பிறகு அக்கட்சியின் குஜராத்தில் இருந்து தங்கள் முகாமைக் கலைத்துவிடுவாா்கள். இதுபோன்ற கட்சியை மக்கள் ஒருபோதும் நம்பக் கூடாது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியினா் மீது அக்கறை இருப்பதுபோல காங்கிரஸ் கட்சி இப்போது முதலைக் கண்ணீா் வடித்து வருகிறது. ஆனால், உண்மையில் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மை செய்து வருவது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மட்டும்தான். பழங்குடி இனத்தைச் சோ்ந்த பெண்ணை முதல்முறையாக நாட்டின் குடியரசுத் தலைவராக்கியது பாஜக மட்டுமே என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com