திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த மணமக்கள்! பரவும் புகைப்படம்

ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த மணமக்கள்! பரவும் புகைப்படம்
திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த மணமக்கள்! பரவும் புகைப்படம்
Published on
Updated on
1 min read


திருவனந்தபுரம்: நீங்கள் அங்கே நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால்தான் நாங்கள் இங்கே மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறோம் என்று ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, குல தெய்வத்தின் பெயருடன் தொடங்கி, மச்சான், மாமன், மாமன் மகன், பேரன் பெயர்த்திகளின் பெயர்களுடன் இறுதியாக திருமண மண்டபத்துக்கு அருகே வரும் பேருந்து எண்களுடன் நிறைவு பெறும் திருமண அழைப்பிதழ்களைத்தான் பார்த்திருப்போம். சிலர், திருக்குறள், கவிதை என விதவிதமாக திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து நண்பர்களின் கவனத்தை ஈர்த்திருப்பார்கள்.

ஆனால், இங்கே கேரள திருமண வீட்டார், நாட்டுக்குள் நாங்கள் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ, எல்லையில் காவல் காக்கும் இந்திய ராணுவத்தினர்தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தங்களது கைப்பட எழுதிய வாசகங்களை அச்சட்டு அசத்தியுள்ளனர்.

இந்த திருமண அழைப்பிதழ்தான் இன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்படும் பேசுபொருளாகவும், பல செய்தி ஊடகங்களில் முக்கிய செய்தியாகவும் மாறியுள்ளது.

கேரள மணமக்கள் ராகுல் - கார்த்திகாவின் திருமணம் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. இவர்கள் அச்சடித்த திருமண அழைப்பிதழில், உங்களால்தான் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம். எங்களுக்கு மிக மகிழ்ச்சியான நாள்களை அளிக்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உங்களால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்கிறோம். எங்களுக்கு மிகச் சிறப்பான இந்த நன்னாளில், உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

இந்த திருமண அழைப்பிதழை, பகிர்ந்து, இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில், மணமக்களுக்கு வாழ்த்துகளும், திருமண அழைப்பிதழில் நன்றி தெரிவித்திருப்பதற்கு தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com