பண்டிகைக் காலத்தில் 5 மோசடிகளில் எச்சரிக்கையாக இருங்கள்: சொல்வது அண்ணன் கூகுள்

பண்டிகைக் காலங்களில் நடைபெறும் மிக முக்கிய ஐந்து மோசடிகள் மற்றும் முறைகேடு தொடர்பான தகவல்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கூகுள் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் 5 மோசடிகளில் எச்சரிக்கையாக இருங்கள்: சொல்வது அண்ணன் கூகுள்


சான் ஃபிரான்சிஸ்கோ: பண்டிகைக் காலங்களில் நடைபெறும் மிக முக்கிய ஐந்து மோசடிகள் மற்றும் முறைகேடு தொடர்பான தகவல்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கூகுள் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரித்துள்ளது.

பரிசுப் பொருள், பரிசுக் கூப்பன், அறக்கட்டளை என்ற பெயரில் மோசடி, சந்தா புதுப்பிப்பு, கிரிப்டோ முறைகேடு தொடர்பாக வரும் முறைகேடுகள் அனைத்திலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கூகுள் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க.. 'துண்டுத் துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என அஃப்தாப் மிரட்டினான்': 2020ல் ஷ்ரத்தா அளித்த புகார்

நாள்தோறும் 1500 கோடி தேவையற்ற மின்னஞ்சல்கள்,  பயனாளர்களிடம் சென்று சேராமல் தடுப்பதாகவும், 99.9 சதவீதம் விளம்பர, மோசடி, முறைகேடு, தவறான மின்னஞ்சல்களை வடிகட்டி பயனாளர்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாத்து வருவதாகவும் கூகுள் கூறுகிறது.

மேலும், பண்டிகைக் கால மற்றும் விடுமுறைக் காலங்களில், பரிசுக் கூப்பன், பரிசுப் பொருள் போன்ற மோசடிகள் அதிகம் நடக்கும். மோசடியாளர்கள், நம்பத்தகுந்தவர்கள் போலவே பேசி, ஏமாறும் நபர்களுக்கு பரிசுப் பொருள் தருவதாக ஆசைக்காட்டி, அவர்களது கிரெடிட் கார்டு எண்ணைக் கொடுத்தால் அதற்கு பரிசுப் பொருள் அனுப்புவதாகவும் மோசடி செய்யலாம். 

ஒருவேளை இந்தப் பரிசுப்பொருள்கள் எல்லாம் உண்மையாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் மோசடியாக இருந்தால்..

அறக்கட்டளை என்ற பெயரில் நன்கொடை கேட்டு வரும் அழைப்புகளிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சில வேளைகளில் சந்தா புதுப்பிப்பு போன்ற மின்னஞ்சல்கள் வரும். சில குறிப்பிட்ட வயதுடையவர்களை குறிவைத்தும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. கிரிப்டோ முறையிலான மோசடிகளும் அவ்வப்போது நடக்கின்றன  என்று கூகுள் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com