செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

முத்துசாமி தீட்சிதர் வீணை இருப்பிடம் அறிந்தது மகிழ்ச்சி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

காசி- தமிழ்ச் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்ட முத்துசாமி தீட்சிதர் புனித வீணை கோவையில் இருப்பது குறித்து ஊடகங்களில் வெளியான தகவலை

News image
Updated On :23 நவம்பர் 2022, 9:03 pm

 நமது நிருபர்

காசி- தமிழ்ச் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்ட முத்துசாமி தீட்சிதர் புனித வீணை கோவையில் இருப்பது குறித்து ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டு, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 "காசி- தமிழ் சங்கமம்' விழாவை பிரதமர் நரேந்திர மோடி வாராணசியில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
 அந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா (எம்.பி.), "கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் காசியிலுள்ள கங்கையில் மூழ்கி எழுந்தபோது, சரஸ்வதி தேவி அவரது கையில் வீணையை அளித்தார். அந்த வீணை இன்னமும் இருக்கிறது. இப்படி தமிழகமும் காசியும் இசையால் பிணைக்கப்பட்டது' என குறிப்பிட்டார்.
 இதன்பின்னர் இந்த வீணை எங்கே இருக்கிறது என்கிற கேள்வி எழுந்த நிலையில் இப்போது இந்த புனித வீணை கோவையில் இருப்பது தெரியவந்தது. முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் வழியிலுள்ள ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம் அந்த வீணை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இந்த செய்தி ஊடகங்களில் வெளிவர இதில் மகிழ்ச்சியடைந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "காசியிலுள்ள தாய் கங்கை நதிக்கரையில் முத்துசாமி தீட்சிதருக்கு கிடைத்த புனிதமான வீணை அவரது வழித்தோன்றல்களிடம் இருப்பதை கண்டுபிடித்ததற்கு நன்றி' எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.