மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சிறுத்தை தாக்கியதில் பலியான 10 வயது சிறுவன்

உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2022, 10:34 am

உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் இறந்த சிறுவன் சந்தீப் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சந்தீப் தனது வீட்டிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக இரவு நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்து சென்றுள்ளார். அப்போது, மரத்தின் பின்னால் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென்று சிறுவன் சந்தீப் மீது பாய்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதன்பின், சிறுத்தை அந்த சிறுவனை அருகிலுள்ள கரும்புத் தோட்டத்திற்கு இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறலைக் கேட்ட அந்த சிறுவனின் பாட்டி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். மக்கள் வருவதைக் கண்டதும் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால், சிறுத்தைத் தாக்கியதில் சிறுவன் சந்தீப் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுத்தை தாக்கியதில் சிறுவன் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் சிறுவர்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.