டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காந்தி ஜெயந்தியில் 1.07 லட்சம் குடிநீர் இணைப்பு: உத்தரப் பிரதேசம் சாதனை

காந்தி ஜெயந்தி நாளன்று 1.07 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :3 அக்டோபர் 2022, 4:01 pm

DIN


காந்தி ஜெயந்தி நாளன்று 1.07 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

மகாத்மா காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி கிராமப்புறங்களில் இந்த மைல்கல் சாதனையை செய்துள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த 20 நாள்களில் மட்டும் 2 சாதனைகளை உத்தரப் பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

பல மாவட்டங்களில் உள்ள கிராமப் புறங்களில் குடிநீர் இணைப்பு குழாய் மூலம் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கூட ஒரு நாளுக்கு 10 ஆயிரம் என்ற இலக்கை எட்டமுடியவில்லை எனவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளன்று 1.21 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கி சாதனை புரிந்துள்ளதாகவும் உத்தரப் பிரதேச அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 

எனினும் காந்தி ஜெயந்தி நாளன்று 1.34 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த இலக்கு 1.07 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் முடிவடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.