இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டில் புதிதாக 3,011 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 அக்டோபர் 2022, 4:38 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 36,126-ஆக குறைந்துள்ளது. 

ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,701-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. 

இந்தியாவின் கரோனா தொற்றின் எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23, 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும் தாண்டியது.

செப்டம்பர் 28-ல் 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும், அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியைத் தாண்டியது.

கடந்த ஆண்டு மே 4 ஆம் தேதி இரண்டு கோடி மற்றும் ஜூன் 23 ஆம் தேதி மூன்று கோடியை தாண்டியது. இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி அன்று நான்கு கோடியைத் தாண்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.