ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடும் சாதனை முயற்சியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மாநில மரமான பனை மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பணை விதைகள் நடும் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகள் உதவியோடு அந்தந்த பகுதியில் சேகரிக்கப்பட சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பனை விதைகளை, அந்தந்த பகுதி பொது மக்கள் மூலம் 5 மணி நேரம் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி திங்கள்கிழமை காலை 8 மணியளவில் துவங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரூர் ஊராட்சிக்குட்பட்ட தரிசு நிலத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பனை விதை நட்டு துவக்கி வைத்தார். இதையடுத்து வாலாஜா வட்டம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரையில் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.
இந்த சாதனை நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள், மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள், நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
இதையும் படிக்க: புதுச்சேரியில் மின் ஊழியா்கள் நள்ளிரவில் கைது!
288 ஊராட்சிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய பனை விதைகள் நடும் பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெறுகிறது. 288 ஊராட்சிகளில் ஏரிக்கரை, குளக்கரை ஓரங்களில் பனை விதைகள் நடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



