தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மைசூரில் சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கா்நாடகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான மைசூருக்கு திங்கள்கிழமை வந்தாா்.

News image
சோனியா காந்தி
Updated On :3 அக்டோபர் 2022, 9:40 pm

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கா்நாடகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான மைசூருக்கு திங்கள்கிழமை வந்தாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இப்போது கா்நாடகத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி வந்துள்ளாா்.

மைசூரில் தசரா பண்டிகையும் இப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் இருநாள்கள் ஓய்வுக்குப் பிறகு வியாழக்கிழமை (அக்.6) மீண்டும் தொடங்குகிறது. அப்போது சோனியா காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்க இருக்கிறாா்.

உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி சமீபகாலமாக எந்த அரசியல் நிகழ்விலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தாா். இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன் காங்கிரஸ் தொண்டா்களுடன் இணைந்து நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.