மும்பை விமான நிலையத்தில் ரூ. 100 கோடி போதைப்பொருள் பறிமுதல்

 மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான 16 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

 மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான 16 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக, ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட இருவா் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் மும்பை பிரிவுக்கு, ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தாா் வழியாக மும்பைக்கு ஹெராயின் கடத்தப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விமான நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பயணி ஒருவரிடம் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ ஹெராயினைப் பறிமுதல் செய்தனா். சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 100 கோடி என அவா்கள் தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட பயணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருவாய் நுண்ணறிவு பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

மேலும், இந்தியாவுக்கு கடத்தப்பட இருந்த போதைப்பொருளை தில்லியில் விநியோகம் செய்வதற்கு திட்டமிட்டிருந்த, கானா நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா் தில்லியில் உள்ள ஹோட்டலில் கைதுசெய்யப்பட்டாா்.

கைதுசெய்யப்பட்ட அப்பெண் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இவ்வழக்கு தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com