அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உதகைக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளிப் பேருந்து விபத்து: 9 பேர் பலி

உதகைக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்த கேரள பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 4:46 am

DIN

உதகைக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்த கேரள பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 42 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் நேற்று இரவு தனியார் சுற்றுலா பேருந்து மூலம் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக கிளம்பியுள்ளனர். அப்போது சுமார் 11.30 மணியளவில் சுற்றுலா பேருந்து வடக்கஞ்சேரி மங்கலம் அருகே வந்த போது முன்னால் கோவையை நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

Story image

அப்போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் விஷ்னு, மாணவி அஞ்ஞனா அஜீத், இமானுவேல், தியா ராஜேஷ், கிரிஸ் வின்டர்பான் தாமஸ், எல்னா ஜோஸ், அரசு பேருந்தில் சென்ற அனூப், ரோஜித் ராஜ் (24), தீபு ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.

Story image

தகவலறிந்து வந்த வடக்கஞ்சேரி போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயமடைந்த மாணவர்கள் மற்றும் அரசு பேருந்து பணிகளை திருச்சூர் அரசு மருத்துவமனை, மற்றும் பாலக்காடு, நெம்மாரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Story image

இதனிடையே விபத்தில் சிக்கிய பேருந்தை பொக்லைன் மூலம் தூக்கிய போது பேருந்தின் அடியே ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்த 9 பேர் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Story image

முதல் கட்ட விசாரணையில் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரியவந்ததுள்ளது. இரவு உணவு சாப்பிட்டு விட்டு பேருந்தில் படம் பார்த்துக் கொண்டு உதகை நோக்கி பயணம் சென்ற மாணவர்கள், ஆசிரியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.