ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 2:40 am

DIN


சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, பட்டினம்பாக்கம், துரைபாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

அதேபோல், புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், போரூர், குரோம்பேட்டை, தாம்பரம் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

பரவலான மழையால் ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து பணிக்கு திரும்புவோர் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.