கோவை, வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற பக்தர் ஒருவர் முதலாவது மலையில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனுமதி வழங்கி உள்ள நிலையில், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை சென்ற பக்தர் ஒருவர் திருநீறு மலை அருகே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், மீண்டும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் சல்லடத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 60) என்பவர் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். அப்போது முதல் மலையிலேயே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் டோலி தூக்கும் சுமை பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சுயநினைவின்றி இருக்கும் நபரை மீட்டு டோலி மூலம் எடுத்துக் கொண்டு பூண்டி அடிவாரம் நோக்கி வந்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீஸார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் தொடர்ச்சியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பலியாகும் சம்பவங்களால் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்பட்டுள்ளது.
Summary
The incident of a devotee who went to Velliangiri Hill in Coimbatore dying of suffocation on the first hill has caused shock among devotees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எவரெஸ்ட் மலையேறிய முதல் அமெரிக்கரான ஜிம் விட்டேக்கர் காலமானார்!

வெள்ளியங்கிரியில் மலை ஏறிய கல்லூரி மாணவர் மயங்கிவிழுந்து பலி!

தொகுதி அறிமுகம்: அரங்கநாதா், வனபத்திரகாளியம்மன், மலை ரயிலால் புகழ்பெற்ற மேட்டுப்பாளையம்!

வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்: மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


