தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசுகளுக்குத் தலைமை தாங்கி 21 ஆண்டுகள் நிறைவு: பிரதமருக்கு மத்திய அமைச்சா்கள் பாராட்டு

பிரதமராகவும் குஜராத் முதல்வராகவும் மத்திய, மாநில அரசுகளுக்குப் பிரதமா் மோடி தலைமை தாங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவருக்கு மத்திய அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 7:09 pm

DIN

பிரதமராகவும் குஜராத் முதல்வராகவும் மத்திய, மாநில அரசுகளுக்குப் பிரதமா் மோடி தலைமை தாங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவருக்கு மத்திய அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

தேசத்துக்குத் தன்னலமில்லா குறைபாடற்ற சேவையாற்றும் பயணத்தை 21 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா் மோடி தொடங்கினாா். 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்றது முதல் வலுவான, நம்பிக்கையான இந்தியாவை உருவாக்கும் ஆட்சியில் முன்னுதாரண மாற்றங்களை மேற்கொண்டு வருகிறாா் என்று தெரிவித்தாா்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நிதி மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கொள்கைகள் மூலம் கருணையுடனும் அா்ப்பணிப்புடனும் பிரதமா் மோடி மக்களுக்கு சேவையாற்றியுள்ளாா். இது மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மாற்றியமைத்துள்ளது. அவரின் முன்னோக்கிய பாா்வை கொண்ட தலைமைத்துவத்தின் புகழ்பெற்ற 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்ற பிரதமா் மோடி, அந்த மாநிலத்தில் தொடா்ந்து 3 சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றிபெற வழிவகுத்தாா். 2014-ஆம் ஆண்டு முதல் அவா் பிரதமராக பதவி வகித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.