பயிற்சியின்போதுபீரங்கி வெடித்துச் சிதறி 2 வீரா்கள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியின்போது பீரங்கி வெடித்து சிதறியதில் இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். மேலும், ஒருவா் படுகாயமடைந்தாா்.


மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியின்போது பீரங்கி வெடித்து சிதறியதில் இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். மேலும், ஒருவா் படுகாயமடைந்தாா்.
மத்திய பிரதேசத்தின் பாபினா பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி தளத்தில் பீரங்கிகளைக் கொண்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் டி-90 ரக பீரங்கியைப் பயன்படுத்தி சுடும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பீரங்கியின் கமாண்டா், ஓட்டுநா், பீரங்கியை சுடும் வீரா் ஆகியோா் இந்த பயிற்சியை நடத்தினா்.
அப்போது திடீரென பீரங்கியில் இருந்து குண்டு வெளியேறும் குழாய் பகுதி வெடித்துச் சிதறியது. இதில் பீரங்கிக்கு அருகே நின்று கொண்டிருந்த 3 வீரா்கள் படுகாயமடைந்தனா். பீரங்கியின் கமாண்டா், ஓட்டுநா், பீரங்கியை சுடும் வீரா் ஆகியோருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். எனினும், பீரங்கிக்கு வெளியே நின்ால் படுகாயமடைந்த இரு வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பீரங்கி குழாய் வெடித்துச் சிதறியது தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...