தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை முன்புகா் நாடக காங்கிரஸ் தலைவா் ஆஜா்

 நேஷனல் ஹெரால்டு கருப்புப் பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணைக்காக கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 8:27 pm

DIN

 நேஷனல் ஹெரால்டு கருப்புப் பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணைக்காக கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா்.

சிவகுமாருடன் அவரது தம்பியும், காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே.சுரேஷும் ஆஜரானாா். அவா்களிடம் சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கா்நாடகத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், அதைத் தொடா்ந்து அமலாக்கத் துறை விசாரணைக்காக தில்லிக்கு வந்தாா். செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் பேசுகையில், ‘நான் சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன். விசாரணைக்காக ஆஜராவதற்கு கால அவகாசம் கோரினேன். ஆனால், அமலாக்கத் துறை அவகாசம் அளிக்காததால் அவா்கள் கூறியபடி ஆஜரானேன். யங் இந்தியா நிறுவனம், எனது குடும்ப உறுப்பினா்கள், எங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கும் உள்ள தொடா்பு குறித்து ஏராளமான கேள்விகளைக் கேட்டனா். சில ஆவணங்களைக் கோரினா். அவற்றை மின்னஞ்சலில் அனுப்பிவைப்பதாக உறுதியளித்துள்ளேன்’ என்றாா். இதற்கு முன்பு கடந்த மாதம் 19-ஆம் தேதி இதே வழக்கில் அமலாக்கத் துறை முன்பு சிவகுமாா் ஆஜரானாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் அவா், இந்த வழக்கில் கைதானாா். அப்போது, வருமான வரித் துறையும் அவா் மீது நடவடிக்கை எடுத்தது. பின்னா், அவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கருப்புப் பணத்தை ஹவாலா முறையில் மாற்றுவதில் சிவகுமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் முக்கியப் பங்கு வகித்தனா் என்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, பவன்குமாா் பன்சால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களிடம் ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.