'பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய்' - நிதீஷ் குமார் காட்டம்!

'பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய்' - நிதீஷ் குமார் காட்டம்!

ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பதவி குறித்து பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பதவி குறித்து பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தோ்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோா் தற்போது பிகார் மாநிலத்தில் மக்களை சந்திக்க நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை விமர்சித்த அவர், அந்த கட்சியை வழிநடத்துமாறு நிதீஷ் குமார் கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். இது அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதுகுறித்து பதில் அளித்துள்ள நிதீஷ் குமார், 'கட்சியில் பதவி வழங்கியதாக, கட்சியை வழிநடத்தக் கேட்டதாக பிரசாந்த் கிஷோர் கூறியது பொய், அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

4-5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னை காங்கிரஸுடன் இணையச் சொன்னார். ஆனால், அவர் பாஜகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com