மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாட்டில் புதிதாக 2,797 பேருக்கு கரோனா தொற்று

நாட்டில் புதிதாக 2,797 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 4:40 am

DIN

நாட்டில் புதிதாக 2,797 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில் நாட்டில் புதிதாக 2,797 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,778 ஆக உயர்ந்துள்ளது. 

அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,251 ஆகக் குறைந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,884 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,51,228 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.75% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 2,18,93,14,422 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,96833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நேற்று கரோனா பாதிப்பு 2,000-க்கும் கீழ் குறைந்த நிலையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.