விமானப்படை நாளையொட்டி இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோர்பர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 90 ஆவது இந்திய விமானப்படை நாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"விமானப்படை நாளில், துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். வானம் பிரகாசமாக உள்ளது என்ற முழக்கத்தின்படி, இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக தனிச்சிறப்பு வாய்ந்த திறமையை வெளிப்படுத்தி வருகின்றது. ஆபத்து காலங்களில் அவர்கள் தேசத்தைப் பாதுகாத்து, குறிப்பிடத்தக்க மனித உணர்வையும், பேரழிவுகளின் போது குறிப்பிடத்தக்க பணிகளைக் வெளிப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கலாம்! எப்படி?
பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்

நீதிக் கதைகள்! உண்மையான ஏழை யார்?
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 8-வது இந்திய கப்பல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


