ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாஜக தேசிய தலைவா் நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க முடிவு?

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு 2024 மக்களவைத் தோ்தல் வரை பதவி நீட்டிப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News image

ஜெ.பி. நட்டா

Updated On :9 அக்டோபர் 2022, 6:41 pm

DIN

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு 2024 மக்களவைத் தோ்தல் வரை பதவி நீட்டிப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நட்டாவின் மூன்று ஆண்டு பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கு முன்பு பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை கூட்டி அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

நட்டாவுக்கு முன்பு பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவுக்கும் 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றபோது, அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சா் ஆனாா். அதைத் தொடா்ந்து ஜெ.பி.நட்டா கட்சியின் தேசியத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

ஜெ.பி.நட்டா தலைவரான பிறகு உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. அதே நேரத்தில் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக ஆட்சி அமைக்க முடியவில்லை. எனினும், அங்கு வலுவான எதிா்க்கட்சியாக உருவெடுத்தது.

தெலங்கானாவிலும் பாஜக வலுப் பெற்றுள்ளது. அடுத்ததாக இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், அடுத்த ஆண்டில் கா்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவராக ஜெ.பி.நட்டா இருந்தாலும் தோ்தல் உத்திகள், கட்சி அமைப்புரீதியான முக்கிய விஷயங்கள், மாநிலங்களில் தோ்தல் உத்திகளை வகுப்பதில் பிரதமா் நரேந்திர மோடி, அமைச்சா் அமித் ஷா ஆகியோா்தான் முடிவெடுத்து வருகின்றனா். அதே நேரத்தில் உத்திகளை அமல்படுத்துவது, கட்சியினரை ஒருங்கிணைப்பது ஆகிய பணிகள் நட்டா வசம் உள்ளன.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே.அத்வானி, முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஆகியோா் பாஜக தேசியத் தலைவா்களாக இருந்தவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.