தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பாஜக தொண்டர்களே பாஜகவின் தோல்வியை எதிர்பார்க்கிறார்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத் மாநிலத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதாகவும், பாஜகவின் தோல்வியினை அவர்களே எதிர்பார்ப்பதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 அக்டோபர் 2022, 12:51 pm

DIN

குஜராத் மாநிலத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதாகவும், பாஜகவின் தோல்வியினை அவர்களே எதிர்பார்ப்பதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் பழங்குடியினர் அதிகம் உள்ள வல்சாத் மாவட்டத்தில் பேரணியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அரவிந்த் கேஜரிவால் இந்து மதத்திற்கு எதிரானவர் என குஜராத்தின் பல பகுதிகளிலும் பதாகைகள் வைக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கேஜரிவால் பேசியிப்பதாவது: “ பல பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்னை ரகசியமாக சந்தித்து ஆளும் பாஜகவை நீங்கள் தான் வீழ்த்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். நான் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான் அது. மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்து பாஜவினை ஆட்சியிலிந்து கீழிறக்க வேண்டும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.