தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தில்லியில் தசரா நாளான அக்டோபர் 5 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி தலைவரும் தில்லியின் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கெளதம் கலந்துகொண்டு பேசுகையில் இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார். இது குறித்து விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபால் கௌதமை கடுமையாக விமர்சித்த பாஜக, முதல்வர் கேஜரிவால் அவரை அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியது.
மேலும், கௌதம் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், நாட்டில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.
இதையும் படிக்க | முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை..!
இருப்பினும், சர்ச்சையைத் தொடர்ந்து, கெளதம் ஒரு விளக்கத்தை வெளியிட்டார், அதில், தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் நான் மதிக்கிறேன் என்றும், மத மாற்றம் தொடர்பான அவமதிக்கும் வகையில் பேசுவதற்கு தான் கனவில் கூட நினைத்ததில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் தான் பேசியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருவதை அடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


