ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அசாமில் ரூ.45 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பிஎஸ்எப் மற்றும் அசாம் காவல்துறையின் கூட்டுக் குழுவினர் ஒரு டிரக்கில் இருந்து ரூ.45 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தா

News image
Updated On :11 அக்டோபர் 2022, 6:28 am

DIN

அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பிஎஸ்எப் மற்றும் அசாம் காவல்துறையின் கூட்டுக் குழுவினர் இணைந்து ஒரு டிரக்கில் இருந்து ரூ.45 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை மிசோரமில் இருந்து கரீம்கஞ்ச் வழியாக திரிபுரா நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது டிரக்கில் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. 

குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் பிஎஸ்எப் மற்றும் கரீம்கஞ்ச் காவல்துறையினர் டிரக்கை இடைமறித்து, அதிலிருந்த 764 சோப்பு பெட்டிகளில் நிரம்பிய வைக்கப்பட்டிருந்த ஹெராயின், ஓட்டுநரின் இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினார். 

ஹெராயின் சுமார் 9.47 கிலோ எடையும், அதன் மதிப்பு ரூ.47.4 கோடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிரக்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.