ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவிடமிருந்து 60 லட்சம் கொசுவலைகளை வாங்குகிறது பாகிஸ்தான்

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் பாகிஸ்தான், மலேரியா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொசுவலைகளை வாங்கவுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2022, 7:07 pm

DIN

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் பாகிஸ்தான், மலேரியா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொசுவலைகளை வாங்கவுள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த அதீத மழை காரணமாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தால் 1,7000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 3 கோடிக்கும் அதிகமானோா் இடம்பெயா்ந்தனா். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நீா் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது.

எனினும், கொசுக்களால் பரவும் மலேரியா உள்ளிட்டவற்றால் அந்நாட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். வரும் ஜனவரிக்குள் நாட்டில் 27 லட்சம் போ் மலேரியாவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், கொசுக்களால் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவிடமிருந்து கொசு வலைகளை வாங்குவதற்கு பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அனுமதி கோரியிருந்தது. அதற்காக உலக சுகாதார அமைப்பையும் அமைச்சகம் நாடியிருந்தது.

அதையடுத்து, இந்தியாவிடமிருந்து சுமாா் 60 லட்சம் கொசுவலைகளை வாங்குவதற்கு அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் சா்வதேச நிதியில் இருந்து கொசு வலைகள் வாங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகா எல்லை வழியாகக் கூடிய விரைவில் கொசுவலைகள் பெறப்படும் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு இந்தியா கொசுவலைகளை வழங்கவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.