நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் தலைவர் எஸ். ரவிக்குமார் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். ரவிக்குமார் ராஜிநாமா செய்ததற்கான எந்த காரணத்தையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் தனது பதவியை செவ்வாய்கிழமை (அக்.11) முதல் ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜிநாமா குறித்து பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ரவிக்குமார் ராஜிநாமா செய்துள்ளது நிறுவனத்துக்கு பெரும் இழப்பு எனவும், நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8%ஆக குறைத்தது ஐஎம்எஃப்
அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2016 ஆல் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியாக நிறுவனம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் மற்றும் காப்பீடு மற்றும் கட்டண வணிகத்தை வழிநடத்தினார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூன்றாவது அதிக சம்பளம் பெற்று வந்த நிர்வாகி ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு நாளை வியாழக்கிழமை(அக்.13) வெளியாக உள்ளது. அன்று பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.65 சதவீதமாக சரிந்து ரூ.1,423,90 வர்த்தகம் முடிவடைந்தது.
ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில் சேவை பிரிவுகளையும் கவனித்துக் கொண்டார். அவர் ஆலோசனை, டிஜிட்டல் விற்பனைகள், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு, பொறியியல் தரவு மற்றும் பகுப்பாய்வு, கிளவுட் மற்றும் சேவை வரிகளை கவனித்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


