ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது தாக்குதல்: 20 பேர் கைது
கிராமத்தில் பொதுவான பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குழுவாக வந்த நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது மற்றொரு குழுவைச் சேர்ந்த நபர்கள் சரமாறியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 20 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்திலுள்ள ராட்டிஹல்லி கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி மீது மற்றொரு குழுவைச் சேர்ந்த நபர்கள் சரமாறியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கிராமத்தில் பொதுவான பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குழுவாக வந்த நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த அஞ்சுமான் என்பவர் உள்பட 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, மோதல் நிகழ்ந்ததாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...