தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாட்டில் புதிதாக 2,786 பேருக்கு கரோனா: 2,557 பேர் மீண்டனர்!

நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :13 அக்டோபர் 2022, 4:45 am

DIN

நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், நாட்டில் புதிதாக 2,786 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,21,319 ஆக உள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 12 இறந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,847 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26,509 ஆகக் குறைந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,557 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,65,963 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.76% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1.05% ஆக உள்ளது

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,15,39,281 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 5,69,709 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.