தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

‘உங்கள் காதைப் பிடித்து இழுத்துவரும் நாள் வரும்’: பாஜகவை சாடிய மம்தா

இன்றைக்கு சோதனை மேற்கொள்ளும் இதே விசாரணை அமைப்புகள் மூலம் பாஜகவினரின் காதைப் பிடித்து இழுத்துவரும் நாள் வரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
மம்தா பானர்ஜி
Updated On :13 அக்டோபர் 2022, 1:00 pm

DIN

இன்றைக்கு சோதனை மேற்கொள்ளும் இதே விசாரணை அமைப்புகள் மூலம் பாஜகவினரின் காதைப் பிடித்து இழுத்துவரும் நாள் வரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மேற்குவங்க மாநிலம் பபானிபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இன்று நீங்கள் (பாஜக) அதிகாரத்தில் உள்ளீர்கள். விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுகிறீர்கள். நாளை உங்களிடம் அதிகாரம் இருக்காது. இதே விசாரணை அமைப்புகள் உங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து உங்கள் காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும். அந்த நாள் விரைவில் வரும்.

துர்கா பூஜையின் போது வதைபடும் அசுரர்கள் இடத்தில் மகாத்மா காந்தியை வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த அநாகரீகத்திற்கு மக்கள் பதிலளிப்பார்கள். நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளேன். எனினும் துர்கா பூஜையின்போது எதையும் தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.