ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17-ல் தொடங்கி அக்டோபர் 25-ல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும்.
இதையும் படிக்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 29 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூன் 19 - 25) 12 ராசிகளுக்கும்! லாபம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு!
சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக சந்தீப் மித்தல் நியமனம்!

சுக்ரன்! பெண் கொடுமைகளுக்கு எதிராக வாதாடும் மாஸ் வழக்கறிஞராக விஜய்!

வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



