ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இமாசலில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்: இன்று செல்லும் பிரபலம் யார்?

இமாசலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

News image
கோப்புப் படம்
Updated On :14 அக்டோபர் 2022, 7:14 am

DIN

ஷிம்லா: இமாசலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

இமாசலில், சோலன் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரியங்கா காந்தி, உரையாற்ற உள்ளார். 

பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக, பகல் 12 மணியளவில், மா சூலினி கோயிலுக்குச் செல்லும் பிரியங்கா காந்தி, அங்கு வழிபாடு நடத்துகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இமாசலப் பிரதேசத்தில் நேற்று சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நிலையில், இன்று பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

நேற்று இமாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டில் 4ஆவது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துப் பின்னர் இந்திரா காந்தி மைதானத்தில் பொது மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல ஹிமாசலின் உனாவில் மருந்துப் பூங்கா மற்றும் புதிய ஐஐடி-க்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.