உலக பட்டினி குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 101-வது இடத்திலிருந்து 107-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
கன்சொ்ன் வோ்ல்டுவைட், வெல்ட் ஹங்கா்ஹில்ஃபே ஆகிய அமைப்புகள் இணைந்து 2022-ஆம் ஆண்டுக்கான சா்வதேச பட்டினிக் குறியீட்டு தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளன.
121 நாடுகளுக்கான இந்த பட்டியலில், இந்தியா 107-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு 94-வது இடத்திலும் 2021 ஆம் ஆண்டு 101-வது இடத்திலும் இந்தியா இருந்த நிலையில் தற்போது மேலும் பின்தங்கியுள்ளது.
இந்த தரவரிசையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்(99 ஆவது இடம்), வங்கதேசம்(84), நேபாளம்(81), இலங்கை(64), மியான்மர்(71) ஆகியவை இந்தியாவைவிட முன்னோக்கி உள்ளது. ஆப்கானின்ஸ்தான் தவிர அனைத்து தெற்காசிய நாடுகளைவிடவும் இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டினி குறியீடு புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்று சீனா, துருக்கி, குவைத் ஆகிய மூன்று நாடுகளும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி

ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக அல்பி மோர்க்கல் நியமனம்!

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படத்தின் படப்பிடிப்பு விடியோ!

தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


