

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் அஸ்தி ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.
முலாயம் சிங் யாதவின் மகனும் சமாஜவாதி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ், கங்கை ஆற்றில் அஸ்தியை கரைத்தார்.
வயது மூப்பு சாா்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங் யாதவ், ஹரியாணாவின் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி காலை காலமானாா்.
அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள முலாயம் சிங்கின் சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று முலாயம் சிங் யாதவின் அஸ்தியை, அவரின் மகன் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வார் கங்கை நதியில் கரைத்தார். அகிலேஷ் யாதவின் மனைவி மற்றும் உறவினர்கள் பலர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.