ஒரே நாடு ஒரே உரம் திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்

‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடக்கி வைத்தார்.
ஒரே நாடு ஒரே உரம் திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Published on
Updated on
1 min read

‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி இன்று (அக்டோபா் -17) தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் 12-ஆவது தவணையான ரூ. 16,000 கோடியை பிரதமா் மோடி விடுவித்தார்.

மத்திய வேளாண்மைத் துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ நிகழ்ச்சியை இரு நாள்கள் நடத்துகின்றன.

நாடு முழுவதிலும் இருந்து சுமாா் 13,500 விவசாயிகளும், 1,500 வேளாண் புத்தொழில்முனைவோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12-ஆவது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவா்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமா் விடுவித்தார்.

மத்திய வேளாண்மை துறையின் ‘பிரதமரின் விவசாய கௌரவ நிதி‘ திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு (11 தவணைகளில்) இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமா் தொடங்கி வைத்தார். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com