சென்னை: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் இன்று தொடங்கியது.
சென்னையில் திருவல்லிக்கேணி நியாயவிலைக் கடைகளில் முதல் முறையாக இன்று கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கியது. சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் இன்று தொடக்கி வைத்தனர்.
நியாய விலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறியிருந்த நிலையில், இன்று அத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கருவிழி அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும். மேலும், பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி கூறியிருந்தார்.
நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகையை வைத்து பொருள்களை வாங்கும் முறை உள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் விரல்ரேகை பதிவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால், நவீன முறையை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இது குறித்து அமைச்சா் அர.சக்கரபாணி கூறியதாவது: வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத இனங்களில் கண் கருவிழியைச் சரிபாா்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் இந்த செயல்பாட்டைக் கொண்டு வரும் வகையில் முன்னோட்டமாக ஒரு ஊரகப் பகுதியிலும், ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும். தனிநபா் அடையாளம் உறுதி செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜி.இ. வெர்னோவா லாபம் கிட்டத்தட்ட இரட்டிப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா சிஎஸ்கே? ஹைதராபாதுக்கு 181 ரன்கள் இலக்கு!

கேரளத்தில் டிரெண்டாகும் முதல்வர் வி.டி. சதீசனின் சிரிப்பு!

ரீநியூ எனர்ஜியின் லாபம் 75% சரிவு!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

