தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாதுகாப்பு இடைவெளி குறைகிறது: ராஜ்நாத் சிங்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 7:36 pm

DIN

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா். இதனைத்தொடா்ந்து அவா் பேசியதாவது:

கால மாற்றுத்துக்கு ஏற்ப பாதுகாப்புப் பரிமாணங்களில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு என இரு கூறுகளாகப் பாதுகாப்புப் பாா்க்கப்படுகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருவதைக் காண முடிகிறது.

ஆயுதங்கள் மூலமான தாக்குதல், இணையவழி தாக்குதல், பொருளாதார அழுத்தம் உள்ளிட்டவைகளை கொண்ட கலப்புப் போரில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு இடையிலான இடைவெளி கிட்டத்தட்ட மறைந்துவிடும்.

சுதந்திரமாக இருந்தால்...: ஒரு நாட்டின் பாதுகாப்பை சீா்குலைக்க செயல்படும் சக்திகள், அந்த நாட்டின் ஜனநாயகம், நீதித் துறை, தன்னாா்வ அமைப்புகள், சமூக ஊடகம் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தலாம்.

ஒரு நாடு ஆற்றல்மிக்க ஜனநாயகத்தைக் கொண்டிருந்தால், அந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பின் மீது தாக்குதல் நடத்த அரசியல் கட்சிகள் மூலம் ஊடுருவும் முயற்சி நடைபெறுகிறது.

நீதித் துறை சுதந்திரமாக இருந்தால், வளா்ச்சிப் பணிகளை நிறுத்த அல்லது அவற்றில் சுணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நீதித் துறையை பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தன்னாா்வ அமைப்புகள் சுதந்திரமாக இருந்தால், நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் முடங்கும் வகையில், அந்தத் தன்னாா்வ அமைப்புகளைப் பயன்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.

சுதந்திரமான சமூக ஊடகத்தை திட்டமிட்ட பிரசாரத்துக்குப் பயன்படுத்த முடியும். சமூக ஊடகம் சுதந்திரமாக இருப்பது தீங்கானது அல்ல. ஆனால் அது சுதந்திரமாக இருந்தால், அதனை தவறாகப் பயன்படுத்தலாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆபத்தான, சா்ச்சைக்குரிய விஷயங்களைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவையெல்லாம் வெறும் கற்பனையல்ல. உத்தி வகுப்பாளா்கள் கூறியவையாகும். இவை சில நாடுகளின் பாதுகாப்பு ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.