தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

உலக அளவில் இந்திய பாதுகாப்புத் துறை முன்னிலை வகிக்கும்: ராஜ்நாத் சிங்

இந்திய பாதுகாப்புத் துறை வரும் காலங்களில் உலக முன்னிலை வகிக்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

News image
ராஜ்நாத் சிங் (கோப்புப் படம்)
Updated On :18 அக்டோபர் 2022, 1:03 pm

DIN

இந்திய பாதுகாப்புத் துறை வரும் காலங்களில் உலக முன்னிலை வகிக்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இது விரைவில் சாத்தியப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

குஜராத் மாநிலம் காந்திநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், உலகின் இளம் நாடாக இந்தியா உள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அறிவாற்றலிலும் இந்தியா இளமையுடன் உள்ளது. அதன் சிந்தனைகளும், இலக்குகளும், பாதைகளும் புதிதாய் உள்ளது. இதனால், அடையும் நோக்கங்களும் புதிய எல்லையாகவே இருக்கும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அசாம் வரை திறாமைசாளிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், அவர்களை கண்டறிய வேண்டிய தேவை உள்ளது. அவர்களை செம்மைப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிப்பாதையில் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.