ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

20 ஆண்டுகள்.. காந்தி குடும்பத்தைச் சேராதவர்  காங்கிரஸ் தலைவராகிறார்: அறிய வேண்டிய 10 தகவல்கள்

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 

News image
20 ஆண்டுகள்.. காந்தி குடும்பத்தைச் சேராதவர்  காங்கிரஸ் தலைவராகிறார்: அறிய வேண்டிய 10 தகவல்கள்
Updated On :19 அக்டோபர் 2022, 9:09 am

DIN

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தேர்தல் முடிவுகளை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகியோரில் ஒருவா் தலைமைப் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராதவா் கட்சித் தலைவா் நாற்காலியில் அமரவுள்ளாா்.

அறிய வேண்டிய 10 தகவல்கள்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகி, தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பெற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் காா்கே, தரூா் ஆகிய இருவரும் களம்கண்டனா்.

மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னா், வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மூத்த தலைவா்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தமையால், அவருக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-இல் தோ்தல் நடைபெற்றிருந்தது. அப்போது, தனக்கு எதிராக போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தாா்.

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் இப்போது நடைபெற்ற தோ்தல் 6-ஆவது முறையாகும். ஏற்கெனவே 1939, 1950, 1977, 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் தோ்தல் நடைபெற்றிருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுமாா் 40 ஆண்டு காலம் நேரு-காந்தி குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளனா். ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா, ராகுல் ஆகியோா் தலைவராக இருந்துள்ளனா்.

நேரு-காந்தி குடும்பத்தின் விசுவாசியாக கருதப்படும் மல்லிகாா்ஜுன காா்கே, அக்குடும்பத்தின் ரிமோா்ட் கன்ட்ரோல் மூலம்தான் செயல்படுவாா் என்று பாஜக விமா்சித்து வருகிறது. 

கட்சித் தலைவராக தாம் பொறுப்பேற்றால், சோனியா குடும்பத்தின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவேன் என்று பல தருணங்களில் காா்கே தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.