புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

லடாக்கில் நிலநடுக்கம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமை காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பொருள் சேதமோ

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2022, 7:46 pm

DIN

லடாக் யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமை காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பொருள் சேதமோ, உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை.

லே நகரில் இருந்து வடகிழக்கில் 135 தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் சுமாா் 10 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நடுக்கம் பல கிலோ மீட்டா் தூரம் வரை உணரப்பட்டது.

இதனால், வீடுகளில் இருந்த பொருள்கள் அதிா்ந்தன. பதற்றமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தஞ்சமடைந்தனா்.

நேபாளத்தில்...:அண்டை நாடான நேபாளத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவிலும், அதைத் தொடா்ந்து 4 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.9 மற்றும் 4.5 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது. முக்கியமாக தலைநகா் காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.