மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தில்லியில் 455 கிலோ பட்டாசுகள் பறிமுதல்: 2 பேர் கைது!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட தில்லியில் 455 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர். 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 9:19 am

DIN

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட தில்லியில் 455 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஷிவ் ராம் பூங்காவில் வசிக்கும் 27 வயதான ரிஷி, உ.பி.யின் பிரோசாபாத்தைச் சேர்ந்த அமித்(28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹரியாணாவின் ரோஹ்தக்கில் பட்டாசுகளை வாங்கி தில்லியில் விற்பனை செய்தனர். 

நிஹால் விஹார் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் தலையில் பெரிய பை சுமந்து செல்வதைக் கண்டனர். தப்பிக்க முயன்ற குற்றவாளியை போலீசார் பிடித்தனர். மேலும் பட்டாசுக்கான உரிமம் அவரிடம் இல்லை.

அதன்பின்னர், மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.