பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட டெங்கு நோயாளி மரணம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறு ஏற்றப்பட்ட சம்பவத்தில் டெங்கு நோயாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட டெங்கு நோயாளி மரணம்
பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட டெங்கு நோயாளி மரணம்
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறு ஏற்றப்பட்ட சம்பவத்தில் டெங்கு நோயாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, மருத்துவமனை பூட்டி சீல்வைக்கப்பட்டது.

அதாவது, ரத்த வங்கியில் பிளாஸ்மா என்று கொடுத்த பாக்கெட்டில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஆரஞ்சு சாறுதான் இருந்ததாக, நோயாளியின் உறவினர் வெளியிட்ட விடியோ வைரலாகியுள்ளது.

அந்த விடியோவில், ரத்தப் பாக்கெட் போல இருக்கும் பாக்கெட்டில் மஞ்சள் நிறத்தில் இருப்பது பிளாஸ்மா அல்ல என்றும் ஆரஞ்சு பழச்சாறு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியில் போலியான பிளாஸ்மா விற்பனை செய்யப்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரயாக்ராஜில் மனிதாபிமானம் என்று செத்துவிட்டதாக உறவினர்கள் கூறுகிறார்கள். ஜால்வாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், டெங்கு பாதித்த நோயாளிகுக்கு பிளாஸ்மா ஏற்றுவதற்கு பதிலாக, ஆரஞ்சு பழச்சாறு ஏற்றப்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நோயாளி இறந்துவிட்டார். இது குறித்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com