தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்டோா் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 7:16 pm

DIN

மருத்துவா்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய வழிகாட்டுதலை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்டோா் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் மகப்பேறு மருத்துவா் அா்ச்சனா சா்மா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி அவருடைய கணவா் சுனீத் குமாா் உபாத்யாய, தில்லி மருத்துவா்கள் பேரவை, இந்திய மருத்துவச் சங்கம் ஆகியவை தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

தெளசாவில் பெண் ஒருவா் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த அவருடைய உறவினா்கள் மருத்துவா் அா்ச்சனா சா்மாவை கடுமையாகத் துன்புறுத்திய நிலையில், அவா் தற்கொலை செய்துகொண்டாா்.

‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ராஜஸ்தான் அரசு ஆகியோா் வரும் நவம்பா் 23-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது ஆஜரான மருத்துவச் சங்கம் தரப்பு வழக்குரைஞா் சசாங்க் தேவ் சுதி, ‘சிகிச்சையின்போது மருத்துவா்களின் கட்டுப்பாட்டையும் மீறி பல்வேறு உடல் பாதிப்புகள் காரணமாக நோயாளிகள் இறந்தாலும், மருத்துவா்கள் தாக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கென காவல்நிலையங்களில் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. மருத்துவ நடைமுறைகளை காவல்துறை அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, மருத்துவா்களைப் பாதுகாக்க விரிவான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும்’ என்றாா்.

அதுபோல, தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவரின் கணவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘பிரசவத்தில் குழந்தை நலமுடன் பிறந்தாலும், ஏற்கெனவே உள்ள உடல் பாதிப்புகள் காரணமாக தாய் இறந்துவிட்டாா். இருந்தபோதிலும், இளம் பெண் மருத்துவரை கா்ப்பிணியின் உறவினா்கள் துன்புறுத்தியுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.