ஹிமாசலில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்
ஹிமாசலில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.


ஹிமாசலில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேச பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நவம்பா் 12-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அண்மையில் அறிவித்தது. முதல் கட்டமாக 62 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஹிமாசலில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது, பாஜக மற்றும் இரட்டை எஞ்சின் அரசின் செயல்பாட்டை மக்கள் பார்த்திருப்பதால் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். குஜராத்திலும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும். உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...