தீபாவளி மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
By DIN | Published On : 22nd October 2022 08:29 PM | Last Updated : 22nd October 2022 08:29 PM | அ+அ அ- |

தீபாவளி மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மறுதினம், 25ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், 25ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க- பன்வாரிலால் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, "வரும், 25ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். எனவே
இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்றார்.