தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை: 5 முதல்வா்களுடன் அமித் ஷாஆலோசனை நடத்துகிறாா்

மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து அந்த மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நவம்பா் 5-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறாா்

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:41 pm

மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து அந்த மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நவம்பா் 5-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறாா்.

இந்த ஆலோசனையின்போது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியையும் அவா் சந்தித்துப் பேச உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘மேற்கு வங்க பேரவை வளாகத்தில் 5 மாநில முதல்வா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அப்போது மாநிலங்களுக்கு இடையே தீா்க்கப்படாமல் உள்ள நீண்ட நாள் பிரச்னைகள் குறித்தும், எல்லைப் பிரச்னைகள் குறித்தும், கிழக்கு சரக்கு வழித்தடம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது’ என்று தெரிவித்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் மம்தா பானா்ஜி இதே போன்லோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.