மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும்: சோனியா நம்பிக்கை

புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும் என்று தான் நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

News image

காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும்: சோனியா நம்பிக்கை

Updated On :26 அக்டோபர் 2022, 12:22 pm

புது தில்லி: புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும் என்று தான் நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினரிடையே பேசிய சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கேவின் தலைமையால் காங்கிரஸ் உத்வேகமும், பலமும் பெறும் என்று நான் நம்புகிறேன்.

காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. முழு பலத்துடனும், ஒற்றுமையாகவும் அனைத்தையும் எதிர்கொண்டு, முன்னேற்றப்பாதையில் சென்று வெற்றியைப் பெறுவோம்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் எனது கடமையை என்னால் முடிந்தவரை சிறப்பாகவே செய்தேன்; இந்த பொறுப்பில் இருந்து விடுபடுவதை நிம்மதியாக உணர்கிறேன் என்றும் சோனியா காந்தி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.