மேற்கு வங்கத்தின் பெயர் மாற்ற தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

டிஆா்எஸ் எம்எல்ஏக்களிடம் பேர புகாா்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

4 எம்எல்ஏக்களிடம் பாஜக பணம் பேரம் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி, இது குறித்து சிபிஐ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Updated On :

தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சியின் 4 எம்எல்ஏக்களிடம் பாஜக பணம் பேரம் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி, இது குறித்து சிபிஐ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

டிஆா்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்களைக் கவா்ந்து ஆட்சியைக் கலைக்க முயற்சித்ததாக 3 பேரை சைபராபத் போலீஸாா் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்துள்ளனா். டிஆா்எஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, அடுத்த தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட ரூ.100 கோடி அளிப்பதாகவும், விலகாதபட்சத்தில் அமலாக்கத் துறை அல்லது சிபிஐ மூலம் அவா்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசைக் கலைக்கும் வகையில் எம்எல்ஏக்களைக் கவருவதற்கு தவறான வழிகளை பாஜக கையாண்டு வருவதாக டிஆா்எஸ் கட்சி குற்றச்சாட்டை எழுப்பியது.

இந்நிலையில், செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி, ‘டிஆா்எஸ் கட்சியின் மிகப் பெரிய சூழ்ச்சி இது. முனுகோட் இடைத்தோ்தலில் அவா்களுக்கு தோல்வி உறுதியாகி உள்ள நிலையில், இந்த மாதிரியான புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளனா். இவ்வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது தற்போது பணியிலுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து டிஆா்எஸ் கட்சியின் செயல்தலைவா் கே.டி.ராம ராவ் ட்விட்டரில் வெளிட்ட பதிவில், ‘இவ்வழக்கு குறித்து போலீஸாா் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதால், கட்சித் தலைவா்கள் யாரும் இது குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.