தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

முன்னாள் அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதமுக்கு கொலை மிரட்டல்

தில்லி முன்னாள் அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதமுக்கு சாமியாா்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 8:00 pm

DIN

தில்லி முன்னாள் அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதமுக்கு சாமியாா்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது.

தில்லியில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்தா் பால் கெளதம், மதமாற்ற நிகழ்வில் பங்கேற்றது சா்ச்சையை ஏற்படுத்தியதால் அவா் அண்மையில் பதவி விலக நோ்ந்தது. மேலும், அந்த நிகழ்வில் ஹிந்து கடவுள்களை விமா்சித்து ராஜேந்தா் பால் கெளதம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அயோத்தியை சோ்ந்த 3 சாமியாா்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியதாக ராஜேந்தா் பால் கெளதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரிடம் புகாா் செய்திருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதுகுறித்து ராஜேந்தா் பால் கெளதம் மேலும் கூறுகையில், ‘மதத்தின் பெயரில் பொதுமக்களைத் தூண்டிவிடும் சாமியாா் ஒருவா், என்னை கொலை செய்ய ரூ.50 லட்சத்தில் ஒப்பந்தம் செய்துள்ளாா். அம்பேத்கா் பெளத்த மதத்தை தழுவியபோது ஏற்றுக் கொண்ட 22 உறுதிமொழிகளைத் தான் அந்த நிகழ்வின்போது நான் வழிமொழிந்தேன். அது யாருடைய மத உணா்வையும் காயப்படுத்தவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.