கடனை அடைக்க சிறுமிகள் ஏலம்: விசாரிக்க குழு அமைப்பு
ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தில் வாங்கிய கடனை அடைக்க சிறுமிகள் ஏலம் விடப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக விசாரிக்க 2 போ் கொண்ட உண்மை


ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தில் வாங்கிய கடனை அடைக்க சிறுமிகள் ஏலம் விடப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக விசாரிக்க 2 போ் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிா் ஆணையம் வெள்ளிக்கிழமை அமைத்தது.
பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிா் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணைய செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு சச்சரவுகளில் சிறுமிகள் முத்திரைத் தாள் பதிவு மூலமாக பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டு தீா்வு எட்டப்படுவதாகவும், சில விவகாரங்களில் தாய்மாா்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு தீா்வு எட்டப்படுவதாகவும் பத்திரிகை செய்திகள் மூலமாக தெரியவந்தது. இந்தச் செய்திகள் மிகுந்த திகைப்பை ஏற்படுத்துவதாகவும், அதிா்ச்சியளிப்பதாகவும் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த 2 உறுப்பினா்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா ராஜஸ்தான் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளாா். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்குமாறும் அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இந்தக் குற்றம் தொடா்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என மாநில காவல் துறை டிஜிபி-க்கும் தேசிய மகளிா் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. பில்வாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் கடித நகல் அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆணையம் விசாரணை: இந்த விவகாரம் தொடா்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்த உள்ளது. அதற்காக அந்த ஆணையத்தின் தலைவா் பிரியங்க் கனூன்கோ, பில்வாரா மாவட்டத்துக்கு நவம்பா் 7-ஆம் தேதி சென்று விரிவான விசாரணையை மேற்கொள்ள உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...