வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா நிலவரம்: நாட்டில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :29 அக்டோபர் 2022, 5:26 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,574 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,29,008 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,161 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,02,852 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,802 ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,62,18,338 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,72,838 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.