/

தொங்கு பாலம் விபத்து: நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி!

தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் செல்லவிருக்கிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :31 அக்டோபர் 2022, 8:27 am

DIN

தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் செல்லவிருக்கிறார். 

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு நதி மீதுள்ள 230 மீட்டா் நீள தொங்கு பாலம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் அறுந்து விழுந்து  விபத்து ஏற்பட்டது. 

இந்த கோர விபத்தில் ஆற்றில் இருந்து 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன பலரை மீட்கும் பணி  நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

முப்படைகள், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் 15 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

கடந்த 6 மாதங்களாக பாலத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்த நிலையில் கடந்த அக். 26 அன்றுதான் திறக்கப்பட்டது குறிப்பிடத்க்கது. 

இந்த விபத்திற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் நாளை குஜராத் மோர்பி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.